ஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் ஹொராண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் அந்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.