ஜேர்மனியில் உள்ள ஆல்வின் என்னும் கிராமம் ஏலத்தில் விடப்படவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த கிராமத்தை நபர் ஒருவர் ஏலத்தில் வாங்கியுள்ளார்.
ஏலத்தில் விடப்பட்ட ஆல்வின் என்னும் குறித்த கிராமம் கிழக்கு ஜேர்மனியில் அமைந்துள்ளது. அங்கே வயதான 20 நபர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த முழு கிராமத்தையும் ஏலத்தில் விடுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆரம்பக்கட்ட விலையாக 125,000 யூரோ என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தொலைபேசி வாயிலாக ஏலம் எடுத்த நபர் ஒருவர் இறுதி விலையாக 140,000 யூரோ என முடித்துள்ளார்.ஆல்வின் கிராமத்தின் உரிமையாளர்களான இரு சகோதரர்களால் இக்கிராமத்தை பாதுகாக்க முடியாமையே இக் கிராமம் ஏலத்தில் விடப்பட்டமைக்கான காரணமாகும்.
இதேவேளை இரண்டாம் உலகப்போரின் போது இளைஞர்களுக்கு ஆல்வின் கிராமத்தில் ஹிட்லர் பயிற்சியளித்தமையும் அதன் சுற்றுவட்டாரத்தில் போர்க்கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

