ஹாமில்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
ஹாமில்டனில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதி மேற்கு – ஜேம்ஸ் வீதியிலேயே அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அதிவேகத்தில் சென்று, டிரக் வண்டி மீது மோதியதையடுத்தே இவ் விபத்து அரங்கேறியுள்ளது.
இவ் விபத்து உயிரிழந்தவர் 45 வயது மதிக்கதக்கவர் எனவும், டிரக் வண்டிக்கு எவ்வித சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாமில்டனில் இவ் ஆண்டு இடம்பெறும் 10வது வாகன ஒட்டுனர் மரணம் இதுவாகும்.