காலி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரேமசிறி ஹலம்பகே துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகள் கடந்த ஒரு வருடத்தின் பின்னர் இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் வேறு ஒரு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அம்பலாங்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யாமல், கொலை செய்வதற்கு பொலிஸார் முயற்சிப்பதாக கடந்த காலத்தில் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. இது தொடர்பில் பிரதான சந்தேக நபர் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றிடம் வாக்கு மூலமும் அளித்திருந்தார்.
குறித்த சந்தேக நபரிடம் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

