ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களின் மீதான ஒழுக்காற்று விசாரணையின் போது எடுக்கப்படும் தீர்மானத்தின் பின்னர் அவர்களது பாராளுமன்ற உறுப்புரிமையும் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஏ.எச்.எம் பௌசி, லக்ஷமன் யாபா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் விஜித் விஜேமுனி சொய்சா ஆகியோரின் பதவி நீக்கம் தொடர்பில் குருணாகலயில் வைத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நான்கு பேருக்கும் ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது நியாயங்களை போதியதாக காணப்படாத போது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.