Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஸ்ரீதேவி ஆக நடிக்க வாய்ப்பு கேட்பேன் – தமன்னா

March 8, 2019
in Cinema
0

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களில், பல வெற்றிப் படங்களில் நடித்து தனிப் பெரும் சாதனை படைத்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அழகும், திறமையும், இனிமையான குரலும் கொண்டவர் ஸ்ரீதேவி. அவரது மறைவு இந்தியத் திரையுலகத்திற்குப் பெரும் இழப்பாக அமைந்தது.

ஸ்ரீதேவி மறைந்த பின் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போகிறார்கள் என அடிக்கடி ஏதாவது ஒரு செய்தி வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அனுமதி இல்லாமல் யாரும் அவருடைய பயோபிக் படத்தை எடுக்க முடியாது.

சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த என்டிஆர் கதாநாயகடு படத்தில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். படத்தில் சிறிது நேரமே அந்தக் கதாபாத்திரம் வந்தாலும் அவருடைய நடிப்பும் அதில் பாராட்டப்பட்டது. ஸ்ரீதேவியின் முழு பயோபிக் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ரகுல் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமன்னாவும் ஸ்ரீதேவி நடிக்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார். “நான் ஸ்ரீதேவியின் மிகப் பெரும் ரசிகை. என்றாவது ஒருநாள் அவர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளது. ஸ்ரீதேவி பற்றிய பயோபிக் படத்தை யாராவது எடுக்கப் போவதாக அறிவித்தால், அவர்களிடம் சென்று நானே எனக்கு அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று வேண்டுகோள் வைப்பேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Previous Post

பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்

Next Post

சந்திரபாபு நாயுடுவை வெளிப்படையாகத் தாக்கும் ‘லட்சுமியின் என்டிஆர் ‘ டிரைலர்

Next Post

சந்திரபாபு நாயுடுவை வெளிப்படையாகத் தாக்கும் 'லட்சுமியின் என்டிஆர் ' டிரைலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures