Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இந்தியா, சீனாவில் உற்பத்தி செய்யப்படும்

November 18, 2020
in News, Politics, World
0

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி தொடங்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து இருப்பதாக ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. ‘ஸ்புட்னிக் வி’ என்றழைக்கப்படும் இந்த கொரோனா தடுப்பூசி, இந்தியாவிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என ரஷ்யா சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பேசியதாவது: ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் அதன் பிரேசிலிய மற்றும் இந்திய கூட்டாளிகளுடன் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை எட்டியுள்ளது.

இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இந்த தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தையும் எட்டியுள்ளது. இது அந்த நாடுகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்லாமல், பிற நாட்டுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கும் வழிவகை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

Previous Post

கொரோனா பாதிப்பு 5.59 கோடியை தாண்டியது

Next Post

பைடன் அமைச்சரவையில் விவேக்மூர்த்தி, அருண் மஜூம்தாருக்கு இடம்?

Next Post

பைடன் அமைச்சரவையில் விவேக்மூர்த்தி, அருண் மஜூம்தாருக்கு இடம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures