வடமத்திய மாகாண வைத்தியர்கள் ஆரம்பித்திருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
தமது பிரதான கோரிக்கைகள் இரண்டிற்கும் தீர்வை பெற்று தருவதாக அதிகாரிகள் உடன்பட்டமையால் குறித்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் வடமத்திய மாகாணத்தின் இணைப்பாளர் வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் காரணமாக சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் முகம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
