தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டமொன்று இன்று (09) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதி தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்டசகல தேர்தல்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு கோரப்படும் திகதி இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

