வேட்புமனுக்களை சரியாக பூர்த்தி செய்ய முடியாத ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர், எப்படி நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மாத்தறை – தெனியாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள 500 கட்டில்களுடன் கூடிய வைத்தியசாலைக்கான காணியை ஆய்வு செய்த போது, ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முதல் கட்ட வேட்புமனு தாக்கலில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை பற்றி பேச வேண்டும்.
அதிகாரம் பெற்ற பிரதிநிதி ஒரு புறம் இருக்க வேறு ஒருவர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார். சிலவற்றில் பெயர்களை எழுதவும் முடியாது போயுள்ளது. சிலவற்றில் கையெழுத்திடவும் முடியாது போயுள்ளது.
இவர்களால் வேட்புமனுக்களை கூட சரியாக நிரப்ப முடியவில்லை. இந்த வேலையைக் கூட சரியாக செய்ய முடியாதவர்கள்தான் நாட்டை ஆட்சி கோருகின்றனர்.
வேட்புமனுக்களை சரியாக பூர்த்தி செய்ய முடியாதவர்கள் எப்படி நாட்டுக்கு வேலை செய்ய முடியும்? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்