வெளிநாட்டில் இருந்து வந்த 16-வயது வாலிபன் சிம்கோ லேக்கில் மூழ்கி மரணம்.
கனடா- சிம்கோ லேக் பார்ரியில் உள்ள சென்ரெனியல் பீச்சில் வாலிபன் ஒருவர் மூழ்கி மரணம் அடைந்துள்ளான்.
16-வயதுடைய இந்த வாலிபன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 மணியளவில் காணாமல் போய் விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலங்களின் பின்னர் தண்ணீருக்குள் நாடித்துடிப்பு அற்ற நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான்.
நியமிக்கப்பட்ட நீச்சல் பகுதிக்கு வெளியே நீந்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
25 முதல் 30அடி தண்ணீருக்கு கீழே இருந்து இவனது உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
மனித சங்கிலி தொடர் ஒன்று ஏற்படுத்தப்பட்டு தீயணைப்பு ஊழியர்கள் மிதவைகளில் நீந்தி தேடுதல் நடாத்தினர்.
இரண்டு டசின் குடிமக்களும் அவசர நிலை பயிற்சி பெற்றவர்களும் தோளுக்கு தோள் லைன் ஒன்றை ஏற்படுத்தி தண்ணீருக்குள் தேடியுள்ளனர்.
தீயணைப்பு பணியாளர் ஒருவர் வாலிபனை கண்டுபிடித்தார்.
இந்த வாலிபன் தாயாருடன் வெளி நாடு ஒன்றில் இருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ளான்.
வாலிபனின் பெயர் வெளியிடப்படவில்லை.
சம்பவத்தின் பின்னர் பீச் மூடப்பட்டது.