வெலிக்கந்த – மொனரதென்ன பகுதியில் நேற்றிரவு, ரயிலில் மோதி யானையொன்று காயமடைந்துள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான ரயிலில் மோதி குறித்த யானை காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக வனவிலங்கு கால்நடை மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ரயில் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.