வெள்ளை மாளிகையிலிருந்து பலமுறை அழைப்பு வந்தும் தான் பேச மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
”நான் இப்போது அதிபருடன் பேசவில்லை; அவர் என் மகளை பற்றி கூறியதற்கு நான் வருந்துகிறேன். நான் அதிபர் செய்தியாளர் கூட்டத்தில் இனவெறியர்களையும், அவர்களது எதிர்ப்பாளர்களையும் ஒன்றாக இணைத்து பேசியதை நானே கண்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறினார் பிரோ.
சனியன்று நடந்த வன்முறையில் 19 பேர் காயமடைந்தனர். வன்முறைக்கு இருதரப்பாரும் காரணம் என்றார் அதிபர் டிரம்ப். ”என் மகள் அனைவரும் சமம் எனும் இயக்கத்தினை தழுவியிருந்தார். நான் அதை தொடர்ந்து செய்யப்போகிறேன். இந்த இயக்கத்திற்காக அதிபர் ஏதேனும் செய்தால் அவர் பின்னால் நான் நிற்கிறேன்” என்றும் பிரோ கூறினார்.
இனவெறியை வெளிப்படையாக அதிபர் டிரம்ப் கண்டிக்காத நிலையில் இரண்டு வர்த்தக ஆலோசனை குழுக்களை கலைக்க வித்திட்டுள்ளது. மேலும் ஏராளமான கண்டனங்களையும் அதிபர் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

