வீரம் 2 படத்திற்காக அஜித், சிவா மீண்டும் இணைவார்களா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் ஒரு குடும்பப்பாங்கான கதையாக நல்ல வரவேற்பை பெற்றது.
அஜித் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விதார்த், பாலா, நாசர், சந்தானம் என பலர் நடிக்க படம் பாக்ஸ் ஆஃபிஸில் இடம்பெற்று வசூலை அள்ளியது.
துவண்டு போன தமன்னாவின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்திய பெருமை இப்படத்திற்கு உண்டு. மேலும் இது வரும் ஜனவரி 10 ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது.
வீரம், வேதாளம், தல 57 என தொடரும் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.
மேலும் தொடர்ந்து இவர்கள் இணைந்தால் இது சிறந்த ரெக்கார்ட் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் இப்போதே ஆரம்பித்து விட்டார்கள்.