இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போக்குவரத்து கண்காணிப்பு செயற்றிட்டமொன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் முறையற்ற விதத்தில் செயற்படும் சாரதிகளைக் கைது செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், இதற்காக 9 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த விசேட கண்காணிப்பு நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

