யாழ்ப்பாணம் அல்வாய் வீதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தீக்குளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விவசாயத்தில் நட்டமடைந்தமையினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பகுதியை சேர்ந்த 60 வயதுடைய மா, உதயதாசன் கடந்த வருடம் வெங்காய பயிர்ச்செய்கை மேற்கொண்டு நட்டமடைந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வருடம் கத்தரி பயிர்ச்செய்கை மேற்கொண்டு அதிலும் நட்டமடைந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மக விரக்த்தியில் மது அருந்திய குறித்த நபர், வீட்டிற்கு வருகை தந்துள்ளதோடு மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டிலிருந்து சென்றவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார்.
தீக்குளித்த நபரை மந்திவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சோர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேறகொண்டு வருகின்றனர்.