வில்வித்தை போட்டி: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் தீபிகா குமாரி தகுதி
ரியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வில்வித்தை ரிகர்வ் பிரிவின் வெளியேற்றுதல் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, இத்தாலிய வீராங்கனை குண்டலினா சர்டோரியை எதிர்கொண்டார்.
இதில் 6-2 (24-27, 29-26, 28-26, 28-27) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இச்சுற்றில் தீபிகா குமாரி, சீன தைபே வீராங்கனை டன் யா-டிங்கை எதிர்கொள்கிறார்.
முன்னதாக, ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தையில் அதானு தாஸ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
இதனிடையே குத்துச் சண்டை 64 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மனோஜ் குமார் லிதுவேனியா நாட்டின் எவல்டாஸ் பெட்ரஸ்காவை 32-வது சுற்றில் தோற்கடித்தார். இவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 16-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.