ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் இதற்கு விருப்பமில்லாதவர்கள் விரும்பியவாறு அரசியல் தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறியதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட அமைச்சர்களுடன் கடந்த 6 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலுக்கு லக்ஸ்மன் கிரியெல்ல, கபீர் ஹாசிம், அகிலவிராஜ்காரியவசம், கமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, தயா கமகே, சரத்பொன்சேகாஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் கலந்துகொள்ளவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவின் பிரதிநிதிகளாக கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம, ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் அமைச்சர் கிரியெல்ல அறிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலேயே பிரதமர் தனக்கு சகல தரப்பினரதும் ஆதரவு இருப்பதாக கூறியதாகவும், கீழ் மட்டம் முதல், சகல மட்டத்தவர்களும் தான் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறிவித்ததாகவும் அமைச்சர் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவும் தனக்கு இருப்பதாகவும் பிரதமர் கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

