ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாசவுக்கு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட எந்த தடையும் இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
விஜேதாச ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையை சேர்ந்தவர். அவர் தொடர்பில் எமக்குப் பிரச்சினை கிடையாது. முன்னர் கோப் தலைவர் பதவியிலும் முக்கிய அமைச்சு பதவிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
சு.கவில் இருந்து விலகி ஐ.தே.வில் இணைந்தார். ஐ.தே.வினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினால் பதவி நீக்கப்பட்டுள்ளார். அது ஐ.தே.கவின் பிரச்சினையாகும்.
அவருக்கு சு.கவுடன் இணைந்து செயற்பட முடியும். அதற்கு எந்த தடையும் கிடையாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.