ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.க்கள் குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதன்போது கூடிய கவனம் கொடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக இன்று (09) காலை அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.