சூரியவெவ – கல்வெவ சந்திக்கு அருகில் வாடகை வீட்டில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத எரிபொருள் களஞ்சியசாலை சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர் 36 வயதான பெல்வத்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சுற்றிவளைப்பின் போது சுமார் 2 லட்சம் பெறுமதியான டீசலுடன், மோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
சந்தேக நபர் சுமார் இரண்டு வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொண்டு இவ்வாறு எரிபொருள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே பலமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளவர் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சூரியவெவ காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

