வன்னியின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை மீட்டெடுத்த 215 ஆவது ஆண்டு நிறைவு நாள் வவுனியாவில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வவுனியா மாவட்டச் செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் சிறப்புரைகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, ப. சத்தியலிங்கம்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

