அரசியலில் ஈடுபடும் எந்தவிதமான யோசனைகளும், எண்ணமும் எனக்கு இல்லை, நான் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக வெளியாகிய செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என ஓய்வு பெற்ற அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தின் அரச அதிபராக இருந்து ஓய்வுபெற்ற நாகலிங்கம் வேதநாயகன் போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
அச் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக என்னுடன் எதுவும் பேசப்படவில்லை, யாரும் என்னை தேர்தலில் போட்டியிட அழைக்கவில்லை, எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை“ எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பல குழப்பங்களை ஏற்படுத்தும் சுமந்திரன் அணியினரே இந்த செய்தியை ஊடகங்களில் ஒரு தலைப்பட்சமாக பரவ விட்டுள்ளனர், நாகலிங்கம் வேதநாயகனுக்கும் இடையில் அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இது போலிச் செய்தி என யாழ்.மாவட்டத்தின் அரச அதிபராக இருந்து ஓய்வுபெற்ற நாகலிங்கம் வேதநாயகன் இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

