Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி

July 22, 2019
in News, Politics, World
0

தமிழ் மக்களின் இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அடிப்படையிலான தீர்வினை நாம் வலியுறுத்தி வருகின்றோம் என வாகரை கதிரவெளி பிரதேசத்தில் இன்று 21 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..

தொழில்நுட்ப உதவியை உள்ளீர்த்து எமது பிரதேசங்களின் இயல்பு மாறாது எழில் குலையாது எமது காலில் நாம் நிற்கக்கூடியதான அபிவிருத்தியை மேற்கொன்டு உங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். அவ்வாறான செயற்றிட்டங்கள் உங்களால் முன்வைக்கப்படும் போது புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்கள் முஸ்லீம்களின்

திட்டமிட்ட நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை அதிக விலை கொடுத்து வாங்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிக பணத்திற்கு வாங்குகிறார்கள் என்பதற்காக இன்று நாம் எமது காணிளை முஸ்லீம்களுக்கோ ஏனையவர்களுக்கோ விற்போமாயின் எதிர்காலத்தில் எமது இருப்பே பெரும் கேள்விக்குறியாகிவிடும்.

குடும்ப வறுமை காரணமாக ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் முஸ்லீம்களால் திட்டமிட்டு மதமாற்றம் செய்யப்பட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதை அறியும் போது உண்மையில் வேதனையாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இருந்து எமது பெண்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்குண்டு. அந்த வகையில் உங்கள் உங்கள் கிராமங்களில் எளிதாக கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை கொண்டு செயற்படுத்தக் கூடிய தொழில் முயற்சிகளை உருவாக்கி கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு எமது இருப்பும் உரித்துக்களும் பறிபோகாதிருக்க வேண்டுமாயின் நம்மை நாம் பலப்படுத்திக்கொள்வதே ஒரே வழியாகும். அதற்காகத்தான் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வு வேண்டுமென நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர், இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜாதுரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் எம். சதீஸ் உள்ளீட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் மக்கள் கூட்டாணியின் கொள்கைகள் குறித்து த.சிற்பரன் அவர்களும், மாற்று அரசியலின் அவசியம் குறித்து இரா.மயூதரன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட ரீதியான செயற்பாடுகள் குறித்து எஸ்.சோமசுந்தரம் அவர்களும் உரையாற்றியிருந்தனர். இந்நிகழ்வில் கதிரவெளி பகுதி மக்கள் சமூக செயற்பாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அதிபர் சேவை: தரம் மூன்றில் 1918 பேர் நியமனம்

Next Post

ஐ.எஸ்.பயங்கரவாதத்தை ஒழிக்க புதிய சட்டம்

Next Post

ஐ.எஸ்.பயங்கரவாதத்தை ஒழிக்க புதிய சட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures