பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க் பற்றி தான் இப்படி தலைப்பு.
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அட்டு டாஸ்க்காக கொடுத்தார்கள். இதை பார்த்த பார்வையாளர்கள் கொஞ்சமாவது மூளையை பயன்படுத்தி டாஸ்க் கொடுங்க பிக் பாஸ் என்றார்கள்.
இதையடுத்து பிக் பாஸ் சீரியஸான டாஸ்க்குக்கு மாறிவிட்டார்.
கார் டாஸ்க்
பிக் பாஸின் சீரியஸ் டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் காயம் அடைந்தனர். அதிலும் குறிப்பாக கார் டாஸ்க் பார்வையாளர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.
கடுப்பு
இந்த கார் டாஸ்க் எல்லாம் ஒரு டாஸ்க்கா, போட்டியாளர்களை ஏன் இப்படி வதைக்கிறீர்கள் என்று பார்வையாளர்கள் பிக் பாஸை திட்டத் துவங்கிவிட்டனர்.
காமெடி
பார்வையாளர்களின் கோபத்தை பார்த்த பிக் பாஸ் காமெடி டாஸ்க்கிற்கு தாவிவிட்டார். போட்டியாளர்கள் ஒருவரையொருவர் கேலி கிண்டல் செய்யச் சொல்லி டாஸ்க் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
ஒன்னு கடினமான டாஸ்க்காக கொடுக்கிறார் இல்லை என்றால் மொக்கை டாஸ்க்காக கொடுக்கிறார் பிக் பாஸ். பார்வையாளர்களை கவரும்படி சுவாரஸ்யமான டாஸ்க்குகளை கொடுத்தால் நன்றாக இருக்குமே.