இந்தோனேஷியா லோம்போக் தீவில் கடந்த ஜூலை 29, ஆகஸ்ட் 19 ஆகிய தேதிகளுக்கு இடையே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியா லோம்போக் தீவில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி 6.4 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னதிர்வுகள் உணரப்பட்டன. அதில் ஒரு சில அதிர்வுகள் 5.9 ரிக்டர் அளவு கோலில் பதிவானது. மிகவும் மோசமான அதிர்வு ஆகஸ்ட் 5-ஆம் தேதி 6.9 ரிக்டர் அளவு கோலில் பதிவானது. இதில் 460-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோப்போ பூர்வோ டிவிட்டரில் தெரிவித்தித்தார். அவர் மேலும் கூறிதாவது: பெரும்பாலான உயிர் சேதங்கள் தெற்கு லோம்போக் பகுதியில் தான் ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 466 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு லோம்போக் பகுதியில் 40, கிழக்கு லோம்போக் பகுதியில் 31, மத்திய லோம்போக் பகுதியில் 2, மடாரம் நகரில் 9 பேர். கிழக்கு சும்பவா தீவு மற்றும் பாலி தீவில் 9பேர் உயிரிழந்துள்ளனர். எங்கள் இலக்கு நிவாரண முகாம்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்குசுத்தமான குடிநீர், மருத்துவ சிகிச்சை, தங்குவதற்கு தேவையான பொருட்கள் வழங்குவதாகும், என்றார்.நிலச்சரிவு ஏராளமான சாலைகள் மூடியுள்ளது. மோசமான இடங்களுக்கு ஹெலிகாப்டர்கள், மிதிவண்டிகள் மட்டுமே செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

