புனித ஹஜ் பயணத்தை முன்னிட்டு சவுதிக்கு 18 லட்சம் பேர் வந்தள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புனித ஹஜ் பயணத்திற்காக சவுதியின் மெக்காவில் உள்ள காபா என்ற இடத்திற்கு உலகில் உள்ள இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் சவுதியின் கடவுச்சீட்டு இயக்குநரகத்தின் ஜெனரல் சுலைமான் பின் அப்துல் அஜிஸ் எஹியா ((General Suleiman bin Abdul Azizi Al-Yehya)) கூறும்போது, நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக 18 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.