மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் மஸ்ஜித் மர்யம் பள்ளிவாசலில் ஜும் ஆ தொழுகையின் பின்னர் யாழ் நகரில் இடம்பெற்றது.
இதன்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள் .
அத்துடன் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியவாறு தமது கண்டனங்களை வெளியிட்டனர்.