ரொறொன்ரோ பெரும்பாகத்தை நோக்கி பனி மற்றும் மழை?
கனடா சுற்று சூழல் விசேட காலநிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ரொறொன்ரோ பெரும்பாக பகுதிகளில் குளிர்கால வானிலை அமைப்பு ஒன்று இன்று இரவு மற்றும் செவ்வாய்கிழமை பனி மற்றும் மழையை கொண்டுவரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை ஒன்ராறியோவின் தென் மேற்கு பகுதியில் ஆரம்பிக்கும். இந்த வானிலை நடவடிக்கை செவ்வாய்கிழமை காலை ரொறொன்ரோ பெரும்பாகத்தை நோக்கி நகரும் என அறிவிக்கப்படுகின்றது.
பனிப்பொழிவு குவிப்பு பனி மழையாக மாறுவதற்கு முன்னர் 10சென்ரி மீற்றர்கள் வரை காணப்படும்.
மிகுந்த சேறு சகதி மற்றும் பனியுடன் கூடிய இந்நிலை காலை நேர போக்குவரத்தை பலவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செவ்வாய்கிழமை காலையில் காணப்படும் இந்த வானிலை அமைப்பு வீதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துமாகையால் வாகன சாரதிகள் எச்சரிக்கப்படுகின்றனர்.