Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜபக்ஷ ஆட்சியின் மோசடிகளே நாடு வங்குரோத்தடையக் காரணம் | சந்திரிகா

March 12, 2022
in News, Sri Lanka News
0
தென்னிலங்கை அரசியலில் திடீர் மாற்றங்கள் | மார்ச் ஐந்தில் களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு

நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளமைக்கான காரணம் 2005 – 2014 வரையான மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகளே ஆகும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,  எனது ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெறுமதியுடைய விமானங்கள் , ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டமையினாலேயே  ராஜபக்ஷவினால் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

2005 – 2014 வரையான காலப்பகுதியில் காணப்பட்ட ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகளின் காரணமாகவே நாட்டு பொருளாதாரம் இன்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

அந்த அரசாங்கத்தினால் பல ட்ரில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது. இவ்வாறு இடம்பெற்ற மோசடிக்கான பணத்தை செலுத்துவதற்காகவே நாம் இன்றும் கடன் மேல் கடன் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

மோசடி செய்வதற்காகவே கடன் பெற்றனர். ஒரு இலட்சத்தில் நிறைவு செய்யப்பட வேண்டிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை 3 இலட்சமாக்கினர்.

அனைத்து வேலைத்திட்டங்களையும் இதே போன்று மூன்று மடங்காக்கினர். இவ்வாறு இடம்பெற்ற மோசடிகளை அவதானித்து சர்வதேசம் கடன் வழங்குவதை நிறுத்தியது.

எந்தவொரு நாட்டிலும் அரசாங்கம் தனியார் வங்கிகளை நாடுவதில்லை. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமும் மேலும் நட்பு நாடுகளிடம் மாத்திரமே கடன் பெற்றுக் கொள்ளப்படும்.

இவற்றிடமிருந்து ஆகக் கூடியது நூற்றுக்கு ஒரு சதவீத வட்டிக்கு மாத்திரமே கடன் பெறப்படும். ஆனால் இவர்கள் நூற்றுக்கு 9 சதவீத வட்டிக்கு கடன் பெற்றனர்.

மத்தள விமான நிலையத்தை அமைத்தனர். அங்கு ஒரு விமானம் கூட செல்வதில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்தனர். அது முழுமையாக கேலிக்குரியது.

இவற்றின் மூலம் அவர்கள் அவரவர் பைகளை நிரப்பிக் கொண்டனர். என்னால் ஆரம்பிக்கப்பட்ட நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலைய வேலைத்திட்டத்திற்கு 280 மில்லியன் டொலர் மாத்திரமே மதிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் இந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய சீன நிறுவனத்திடம் இவர்கள் 140 மில்லியன் டொலரை மேலதிகமாகக் கோரினர்.

நேர்மையான சீன நிறுவனம் அவ்வாறு வழங்க முடியாதெனக் கூறியது. இதனால் மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் வேலைத்திட்டத்தை 520 மில்லியன் டொலருக்கு கையெழுத்திட்டனர். இவ்வாறான மோசடிகளின் காரணமாகவே நாடு இன்று வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது.

தற்போது மத்திய வங்கியும் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சிறிமாவோ பண்டாரநாயக்க காலப்பகுதியில் இவ்வாறான மோசடிகள் ஒருபோதும் இடம்பெறவில்லை. அவரை பின்பற்றி எனது ஆட்சி காலத்தில் நானும் மோசடிகளுக்கு இடமளிக்கவில்லை. இதன் காரணமாகவே யுத்தத்திற்கு மத்தியிலும் இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது. எனது ஆட்சி நிறைவடையும் போது நான்கில் மூன்று வீதம் யுத்தம் நிறைவடைந்திருந்தது.

எனது ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெறுமதியுடைய விமானங்கள் , ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றின் மூலமே ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை முழுமையாக நிறைவுக்கு கொண்டு வந்தது. எனது ஆட்சியில் மோசடிகளுக்கு இடமளிக்காமையின் காரணமாகவே இதனை செய்ய முடிந்தது. எனது ஆட்சியில் யுத்தத்திற்கு மத்தியில் தனிநபர் வருமானத்தை மூன்று மடங்காக அதிகரிக்கக் கூடியதாக இருந்தது.

அரச வருமானம் , அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது. தனியார் துறையும் அதற்கு சமாந்தரமாக வளர்ச்சியடைந்தது. நான் ஆட்சியைக் கைப்பற்றும் போது வறுமையான 200 நாடுகளில் 175 ஆவது இடத்திலிருந்த இலங்கை 75 இடத்திற்கு முன்னேற்றப்பட்டது. தெளிவான அபிவிருத்தி திட்டங்களுடன் , ஏனைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இன்று அவ்வாறு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கவைப் போன்று தற்போது தலைவரொருவர் காணப்பட்டால் நாட இந்த நிலைமையை அடைந்திருக்காது என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

Next Post

கோலூன்றிப் பாய்தலில் சச்சினி கௌஷல்யா புதிய சாதனை

Next Post
கோலூன்றிப் பாய்தலில் சச்சினி கௌஷல்யா புதிய சாதனை

கோலூன்றிப் பாய்தலில் சச்சினி கௌஷல்யா புதிய சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures