Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

November 16, 2020
in News, Politics, World
0

சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலு வலக புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகப் புகை யிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் பத்மலால் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் காலை மற்றும் பிற்பகல் சிறப்பு அலுவலக புகையிரதங்கள் உட்பட 80 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொழு ம்பு கோட்டைத் தவிர ஏனைய புகையிரத நிலையத்திலும் புகையிரதங்களை நிறுத்தப்படமாட்டாது.

அதன்படி, பிரதான புகையிரத பாதைகளான மருதானை புகையிரத நிலையம், தெமட்டகொட உப புகையிரத நிலையம், களனி புகையிரத நிலையம், வனவாசல உப புகையிரத நிலையம், எந்தேரமுல்ல உப புகையிரத நிலையம், ஹொரப்பே உப புகையிரத நிலையம், ராகம புகையிரத நிலையம், வல்பொல உப புகையிரத நிலையம், பட்டுவத்த உப புகையிரத நிலையம் ஆகிய புகையிரத நிலையங்களிலும் நிறுத்தப்படமாட்டாது.

அத்துடன் புத்தளம் பாதை ஊடாக செல்லும் புகையிரத நிலையங்கள்

பேரலன்த உப புகையிரத நிலையம், ஜா-எல புகையிரத நிலையம், துடெல்ல உப புகையிரத நிலையம், குடஹ கபொல உப புகையிரத நிலையம் ,குரண புகையிரத நிலையம் ,நீர்கொழும்பு புகையிரத நிலையம் , கட்டுவ உப புகையிரத நிலையம் ஆகிய புகையிரத நிலையங் களில் நிறுத்தப்படமாட்டாது.

களனி பாதையில் பயணிக்கும் புகையிரத நிலையங்கள் பேஸ்லைன் வீதி புகையிரத நிலையம், கொட்டா வீதி உப புகையிரத நிலையம் மற்றும் கரையோரப் புகையிரத பாதையில் பயணிக்கும் செயலகம் உப புகையிரத நிலை யம், கொம்னித்தெரு புகையிரத நிலையம், அங்குலான புகையிரத நிலையம் ஆகிய நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப் படமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post

முஸ்லீம்களின் உடல்களை அடக்கம்செய்வதற்கு அனுமதிக்குமாறு கோருவதா

Next Post

கொரோனா மரணம் குறித்து போலியான செய்தி; சந்தேகநபர் கைது

Next Post

கொரோனா மரணம் குறித்து போலியான செய்தி; சந்தேகநபர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures