“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனக்கு எந்தவொரு டீலும் கிடையாது” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
“எதிரணி பக்கமிருந்து உறுப்பினர்கள் சென்றாலும் எமது பலம் குறையாது. அரசியல் என்றாலேயே உள்வரவும், வெளிச்செல்லுகையும் இருக்கத்தான் செய்யும். எமது பக்கம் திருடர்கள் இருந்தனர் என்று அன்று கூறினார்கள். அவ்வாறிருந்த திருடர்கள்தான் இன்று அரசு பக்கம் இருக்கின்றனர்.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எனக்கு எந்தவொரு டீலும் கிடையாது. அவருடன் டீல் போடவும் முடியாது.
தற்போது அரசுக்குள் இருந்துகொண்டு டீல் போடுபவர்களே என் மீது விமர்சனம் முன்வைக்கின்றனர்” என்றும் மஹிந்த மேலும் கூறியுள்ளார்.