Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்.வேலணையில் ஒருவருக்கு கொரோனா

November 28, 2020
in News, Politics, World
0

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கெக்கிராவையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுள்ள உள்ளது. அவர் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுகிறார் என்று அவர் குறிப்பிட்டார்.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 200 பேரிடம் எழுமாறாக எடுக்கப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில் வேலணை புளியங்கூடல் வீதித் திருத்தப்பணிக்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும் அடங்கியிருந்தனர்.

இந்த நிலையில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 199 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, புளியங்கூடல் பகுதியில் 2 வர்த்தக நிலையங்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இன்று காலை மூடப்பட்டுள்ளன. அத்துடன், இன்று காலை 9 மணிவரை 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மேற்கொண்டு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

சங்கானை பகுதியில் உள்ள மீன் சந்தை மூடப்பட்டது

Next Post

திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம்

Next Post

திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures