Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற மூதாட்டியின் நகைகள் திருட்டு!

January 6, 2022
in News, Sri Lanka News
0
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற வயோதிப பெண்ணின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிப பெண் இன்றைய தினம் வியாழக்கிழமை , சிகிச்சையின் நிமித்தம் , “எக்ஸ்ரே” எடுப்பதற்காக சென்ற போது, தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றினை கழட்டி , தனது கைப்பையினுள்  வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து அவர் திரும்பி வந்து கைப்பையினை பார்த்த போது , அதனுள் இருந்த நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை கண்ணுற்று , வைத்தியசாலை நிர்வாகத்திடம், முறையிட்டுள்ளார்.

நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு, வைத்தியசாலை நிர்வாகம் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளது.

தினமும் வைத்தியசாலைக்கு பெருமளவானோர் , பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதனால் , சிகிச்சைக்கு வருவோர் தமது உடமைகளை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதனால் பெறுமதியான உடமைகளுடன் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு, வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பாடலாசிரியர் காமகோடியான் மறைவு

Next Post

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பு

Next Post
அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures