Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா

January 8, 2021
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மருத்துவ பீட மாணவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்று மாலை இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
மாத்தளையைச் சேர்ந்த மாணவன், வீட்டுக்குச் சென்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கும் சென்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.
மாணவன் சென்ற இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சுகாதாரத் துறையினர் நேற்றிரவு முதல் முன்னெடுத்தனர்.
அதனடிப்படையில் உணவகம், குடிதண்ணீர் வழங்கல் நிலையம் என 7 வர்த்தக நிலையங்கள் இன்று காலைவரை மூடப்பட்டுள்ளன. அவற்றில் பணியாற்றுபவர்கள் உள்பட 50 பேர்வரை சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மாணவனுடன் தொடர்பட்ட நாளிலிருந்து 7ஆவது நாள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Previous Post

வவுனியா பாடசாலை சிரமதானத்திற்கு சமூகமளிக்குமாறு பெற்றோர்களுக்கு அழைப்பு

Next Post

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Next Post

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures