யாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன வன்முறையாளர்கள் 1981 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி திட்டமிட்டு எரித்தனர்.
இதில் 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், பல நூற்றாண்டு பழமைவாய்ந்த ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நூல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் அழிக்கப்பட்டன.