யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியுடன் தப்பியோடியுள்ளதாக இராணுவத்தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
வலிகாமம் வடக்கு பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
நேற்றைய தினம் இரவு காவலரண் ஒன்றில் கடமைக்காகச் சென்றவர் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
என்ன காரணத்துக்காக இவ்வாறு இவர் தப்பிச் சென்றார் என்பது சொல்லப்படவில்லையாயினும் தப்பிச் சென்றவரைத் தேடும் பணியில் பலாலி இராணுவத்தரப்பு முனைப்புக் காட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் படைத்தரப்பை விட்டுத் தப்பியோடுவது என்பது புதிய விடயமல்ல. கடந்த யுத்த காலத்திலும் ஏராளமான இராணுவச் சிப்பாய்கள் தப்பியோடியுள்ளனர். ஆனாலும் யுத்தமற்ற இந்தச் சூழ்நிலையில் இவர் தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

