யாழ்.பண்ணை கடற்கரையில் மாலை வேளை ஓய்வெடுக்க சென்ற இளைஞர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.
யாழ். சாவற்காடு , ஆனைக்கோட்டையை சேர்ந்த 25 வயதான லிங்கேஸ்வரன் றீகன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த 30 ஆம் திகதி மாலை தனது நண்பர்களுடன் பண்ணை கடற்கரையில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். வீதியருகே நண்பர்களுடன் நின்றிருந்த வேளை, பண்ணை வீதி வழியாக மண்டைதீவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் குறித்த இளைஞர் மீது மோதியதில் இளைஞர் பலத்த காயங்களுக்கு உள்ளானர்.
காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்ட குறித்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.