காட்டு யானையின் தாக்குதலில் மதவாச்சி, கரம்பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு முன்னால் முற்றத்தை சுத்தப்படுத்திக் கொண்டு நின்ற பெண் மீது யானை தாக்கியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மதவாச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.