ஒவ்வொரு ஹீரோவுக்குள்ளும் ஒரு இயக்குனர் உறங்கிக்கொண்டு தான் இருக்கிறார் என சொல்லும் விதமாக கடந்த ஆண்டு மோகன்லால் ஹீரோவாக நடிக்க ‘லூசிபர்’ என்கிற படத்தின் மூலம் தான் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருப்பதாக நடிகர் பிருத்விராஜ் அறிவித்தார். ஆனாலும் ஒருபக்கம் மோகன்லாலும் இன்னொரு பக்கம் பிருத்விராஜூம் மாறிமாறி பிஸியாக நடித்துக்கொண்டிருகிறார்கள்.
இதனால் இந்தப்படம் உருவாவது சாத்தியமா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழாதவாறு அவ்வப்போது படம் குறித்து அப்டேட் செய்து வருகிறார்கள் இருவரும்.. அந்தவகையில் கடந்த மாதம் இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை இறுதி செய்வதாக கூட்டாக அறிவித்தார்கள்.. இதோ இப்போது படத்தின் டைட்டில் டிசைனை ஒரு நிமிட டீசராக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்கள்.