மோகன்லால் தற்போது லண்டனில் இயக்குனர் ரஞ்சித் டைரக்சனில் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை முடித்துவிட்டு வந்ததும் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்கிற வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரியதர்ஷன் தான் இந்தப்படத்தின் இயக்குனர் என்றாலும், இதில் அவருக்கு உதவியாக, மோகன்லாலின் இன்னொரு ஆஸ்தான இயக்குனரான மேஜர் ரவியும் பணியாற்ற இருக்கிறார்.. மோகன்லாலை வைத்து ராணுவ படங்களாக இயக்கியவர்தான் இந்த மேஜர் ரவி.
மோகன்லாலுக்காகத்தான் இப்படி இறங்கி வந்துள்ளாரா என்றால் அதுவும் ஒரு காரணம் என்கிற மேஜர் ரவி, தனது குருநாதர் பிரியதர்ஷன் அழைப்பின் பேரிலே இந்தப்படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.