Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மைத்­தி­ரி­யி­டம் இருந்து சாத­கமான பதில் இல்லை- மனோ கணேசன்

October 14, 2017
in News, Politics
0

அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­ட­ மி­ருந்து எந்­த­வொரு ஆக்­க­பூர்­வ­மான பதி­லும் கிடைக்­கப் பெற­வில்லை. சட்­டமா அதி­ப­ரு­டன் பேசு­வேன் என்­ப­தையே மீண்­டும் தனது பதி­லாக அரச தலை­வர் கூறி­யுள்­ளார்.

அமைச்­சர் மனோ­க­ணே­சன் நேற்று மதி­யம் அரச தலை­வ­ரைச் சந்­தித்­துப் பேசி­ய­போ­தும், அர­சி­யல் கைதி­கள் விட­யம் குறித்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால உருப்­ப­டி­யான பதிலை வழங்­க­வில்லை.

‘‘இது­பற்றி ஆராய்ந்து முடிவை எடுப்­ப­தாக மைத்­திரி என்­னி­டம் கூறி­னார். தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரை­யில் திருப்­தி­க­ர­மான பதி­லாக இல்­லா­மல் இந்த விவ­கா­ரம் தொடர்ந்து இழு­ப­றி­யி­லேயே இருப்­ப­தையே காட்­டு­கி­றது’ என்று அமைச்­சர் மனோ­க­ணே­சன் தெரி­வித்­துள்­ளார்.

அர­சி­யல் கைதி­க­ளின் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டம், வடக்­கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட முழு அடைப்­புப் போராட்­டம் போன்ற விட­யங்­கள் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, நேற்று மதி­யம் அமைச்­சர் மனோ­க­ணே­சன் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னார்.

இந்­தப் பேச்­சுத் தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

வடக்­கில் நடை­பெ­றும் எதிர்ப்பு போராட்­டங்­கள் கார­ண­மாக அங்கு சட்­டம் ஒழுங்­குக்­குப் பாத­கம் இல்லை என்று தனக்கு வட மாகாண பிர­திப் பொலிஸ் மா அதி­ப­ரும், இரா­ணு­வத் தள­ப­தி­யும்­கூ­றி­யுள்­­ளார் என்று அரச தலை­வர் என்­னி­டம் கூறி­னார்.

சட்­டம் ஒழுங்­குக்கு பாத­கம் இல்­லை­யா­னா­லும் அர­சி­யல்­ரீ­தி­யாக இது பெரும் நெருக்­கடி நில­மையை வடக்­கில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று நான் அரச தலை­வ­ருக்கு எடுத்து கூறி­னேன்.

சட்­டமா அதி­பரை அலை­பே­சி­யில் தொடர்பு கொண்ட அரச தலை­வர் இது­பற்­றிய சட்ட மா அதி­ப­ரின் கருத்தை கேட்­டுத் தெரிந்­து ­கொண்­டார்.

இந்த வழக்­கின் சாட்­சி­க­ளாக இருக்­கின்ற தமி­ழீழ விடு­தலை புலி­கள் இயக்க முன்­னாள் உறுப்­பி­னர்­களே தங்­க­ளுக்கு பாது­காப்­பைக் கோரி வவு­னி­யா­வுக்கு செல்ல இய­லாது என்று கூறு­கின்­ற­னர் என­வும், இத­னா­லேயே சிக்­கல் ஏற்­பட்­டுள்­ள­தாக சட்­டமா அதி­பர் கூறு­கின்­றார் என்­றும் அரச தலை­வர் என்­னி­டம் தெரி­வித்­தார்.

இன்று போர் முடிந்த நிலை­யில் நாட்­டின் எல்லா பகு­தி­க­ளுக்­கும் எவ­ரும் சென்று வரக்­கூ­டிய நிலை­யில், சட்­டமா அதி­பர் இத்­த­கைய முடிவை எடுத்­தி­ருப்­பது தமிழ் மக்­க­ளுக்கு தவ­றான செய்­தியை தரு­கி­றது என்று நான் எடுத்து கூறி­னேன்.

வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே மற்­றும் யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற உள்ள தேசிய தமிழ் மொழித் தின விழாவை பொறுப்­பேற்று செய்­யும் எமது கூட்­ட­ணி­யின் பிரதி தலை­வ­ரும், கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ராதா­கி­ருஷ்­ணன் ஆகி­யோ­ரும் என்னை அலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு இது குறித்­துப் பேசி­னார்­கள்.

அவர்­கள் இரு­வ­ரும்­கூட இது தொடர்­பில் எனது கருத்­தையே கொண்­டுள்­ள­னர் என்று நான் அரச தலை­வ­ரி­டம் கூறி­னேன். இது பற்றி தான் மேலும் ஆராய்ந்து முடிவை எடுப்­ப­தாக மைத்­திரி என்­னி­டம் கூறி­னார்.

இது இன்று தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரை­யில் திருப்­தி­க­ர­மான பதி­லாக இல்­லா­மல் இருக்­கும். இந்த விவ­கா­ரம் தொடர்ந்து இழு­ப­றி­யி­லேயே இருப்­பதை காட்­டு­கி­றது.

இது நமது அர­சுக்கு, தமிழ் மக்­கள் மத்­தி­யில் இருக்­கின்ற நற்­பெ­யரை பாதிக்­கும். நியா­ய­மான முடிவை எடுங்­கள் என்று கூறி­விட்டு வந்­தேன். இது தொடர்­பில் தான் மேலும் ஆராய்ந்து பார்த்து முடி­வு­களை எடுப்­ப­தாக அரச தலை­வர் தெரி­வித்­தார்’’ – என்­றுள்­ளது.

இதே­வேளை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், அரச தலை­வர் மைத்­திரி, நீதி அமைச்­சர் தலதா, சட்­டமா அதி­பர் ஆகி­யோரை அரச தலை­வர் செய­லத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு சந்­தித்­துப் பேசி­யுள்­ளார்.

அரச தலை­வர் செய­ல­கத்­தில் நடை­பெற்ற வேறு நிகழ்­வில் கலந்­து­கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே, பேச்சு நடை­பெற்­றுள்­ளது.
சாட்­சி­ய­ம­ளிப்­ப­தில் அச்­சு­றுத்­தல் இருப்­ப­தா­கக் கூறி­ய­வ­ரு­டன் இது தொடர்­பில் பேசு­வ­தாக சட்­டமா அதி­பர் இந்­தச் சந்­திப்­பில் கூறி­யுள்­ளார்.

இதன் பின்­னர் எந்­த­வொரு தக­வ­லும் சட்­டமா அதி­ப­ரி­ட­மி­ருந்து கிடைக்­கப் பெற­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Previous Post

அமெரிக்கா–கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் மீட்டது.

Next Post

டெங்கைக் கட்டுப்படுத்த சிறப்பு வேலைத்திட்டம்

Next Post

டெங்கைக் கட்டுப்படுத்த சிறப்பு வேலைத்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures