முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து இன்னும் கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகப் பேசப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனைத் தொடர்ந்து சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தைத் தொடங்கினார்.
தற்போது வரை பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. தனது 20 வருட திரைப்பயணத்தை சமீபத்தில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் திரிஷா.
Mexico in a nutshell❤️🎶 pic.twitter.com/PSOSJwNBXA
— Trish (@trishtrashers) March 23, 2022
தற்போது திரிஷா மெக்சிகோ சென்றிருக்கிறார். அங்கு நண்பர்களுடன் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]