கடந்த 2009 ஆம்ஆண்டு மொரட்டுவ பகுதியில் வைத்து நபர் ஒருவரை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு, மரணதண்டனை விதிக்கபட்டுள்ளது.
இந்த மரண தண்டனையை பாணந்துறை மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மொறட்டுவ, எகொட உயன பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 7 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி வீரமன் சேரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்ட நால்வர் விடுதலை செய்வதற்கு உத்தரவிடப்பட்ட நிலையில் ஏனைய மூவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

