Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம் காங்கிரஸ் போராளி மீது, :தாக்குதல்

December 13, 2017
in News, Politics, World
0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய மூத்த போராளியான போராளி சுபியான் என்று பிரபலமான எம்.ஏ.சி.ரமீஸ் நேற்று இரவு முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு பிரதானி ஒருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

நேற்று பாலமுனைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உலங்குவானூர்த்தியில் வருகை தந்து அட்டாளைச்சேனைப் பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஒழுங்கு செய்து விட்டு போனதன் பின்னர் அட்டாளைச்சேனை அரபா வட்டாரத்தில் முன்னாள் உறுப்பினரான எஸ்.எல்.முனாஸை தலைவர் நேரடியாக நியமித்தமை அட்டாளைச்சேனை மத்திய குழுவில் இருக்கும் சிலருக்கு பிடிக்கவில்லை. அது சம்மந்தமாக என்னை சமரசம் பேசுவதற்காக முன்னாள் உறுப்பினர் ஒருவர் அழைத்து அங்கு சென்ற போது குறித்த நபரும் அங்கிருந்துள்ளார்

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கருத்து தெரிவிக்கையில்

“என்னைக் கண்டதும் நல்ல முறையில் பேசிய அவர் என் முன் வந்து நீ எப்படா கட்சிக்குள் வந்தாய் என்று இன்னும் பல வார்த்தைகள் சொல்லி என்னை மிக மோசமாகத் தாக்கினார். அவரின் வயதைக் கருத்தில் கொண்டு நான் எதுவும் செய்யாமல் அவரின் அடிகளைத் தாங்கினேன் பின்னர் அங்கு நின்றவர்கள் என்னையும் குறித்த நபரையும் விலக்கி விட்டனர்.

அத்துடன் வாகித் என்பவர் என்னை நெஞ்சில் தாக்கிய காரணத்தினால் எனக்கு சுவாசிப்பது மற்றும் நெஞ்சுக்குள் அதிக வலி காரணமாக நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளேன்.
எனவே இப்படியான் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை உடனடியாக கைவிட வேண்டும். என்னைத் தாக்கிய நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் “என்று போராளி சுபியான் ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.

Previous Post

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வழிகாட்டி வெளியீடு

Next Post

சகவாழ்வினை ஏற்படுத்த சர்வ மத தலைவர்கள் முன்வரவேண்டும்

Next Post
சகவாழ்வினை ஏற்படுத்த சர்வ மத தலைவர்கள் முன்வரவேண்டும்

சகவாழ்வினை ஏற்படுத்த சர்வ மத தலைவர்கள் முன்வரவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures