முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையில் நோயாளர்கள் மட்டுமன்றி மாவட்ட அரச அதிபர்கூட பெரும் அசௌகரியத்தினை சந்தித்தமையே வரலாறாகவுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாவட்டச் செயலகத்தில் இணைத்தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கருத்து பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் இங்கு மேலும். கருத்து தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதான வைத்தியசாலையான மாஞ்சோலை வைத்தியசாலை ஓர் பெயர அளவிலாள வைத்தியசாலையாக மட்டுமே உள்ளது. இங்கு நோயாளர்கள் பெரும் சிரமத்தையே எதிர்கொள்கின்றனர். இவை இன்றுவரை தீர்க்கப்படவில்லை. அது மட்டுமன்றி அங்கே வைத்தியர்களோ , தாதியர்களோ பொறுப்பின்றியே செயல்படுவதோடு நோயாளர்களை கவனிப்பதே கிடையாது. எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட நீர்ப்பாசணப் பொறியியலாளர் சாதரணமாக ஒருநாள் குருதி அழுத்தம் ( பிறசர் ) பரி சோதிக்க சென்ற என்னை விடுதியில் தங்கி நிற்குமாறும் அவ்வாறானால் மட்டுமே பார்வையிட முடியும் என்பதனால் பார்வையிடாமலே வெளியேறினேன் . எனச் சுட்டிக்காட்டினார். இதேவேளை இது தொடர்பில் கருத்துரைத்த மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன்
ஓர் நாள் ஏற்பட்ட காயத்திற்கு அவசரமாகச் சென்ற நான் பெரும் அசௌகரியத்தினை சந்தித்தமையே வரலாறாகவுள்ளது.
குறித்த வைத்தியசாலை தொடர்பில் புகார்களே முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார். இவ்வாறு குறித்த வைத்தியசாலைத் தொடர்பில் பலரும் குற்றச் சாட்டினை அடிக்கினர்.
இறுதியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் இது தொடர்பில் கருத்துரைத்தபோது ,
மாவட்ட வைத்தியசாலையின் நிர்வாகி தற்போது மாற்றப்பட்டு ஓரளவு சீர் செய்யப்படுகின்றது.்அதன் வழியில் ஏனைய குறைபாடுகளும் சீ் செய்யப்பட்டு நேர்த்தியான சேவைக்குரிய வழி செய்யப்படும். என்றார்