அரசியல் அமைப்பு பரிந்துரைகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே முரண்பாடான கருத்துக்களை முன்வைத்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கட்டளை ஒழுங்குவிதிகள் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நீதித்துறை பொறிமுறையை பாதுகாக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
நீதிபதிகள் பல சந்தர்ப்பங்களில் ஊமைகளாக்கப்படுகின்றனர். பலர் வழக்குகள் எழுதாது இருப்பதாக பொதுவான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.
இதில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். அதேபோல் தகுதிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். சிரேஷ்ட தன்மை உள்ளதா என்பதை அறிய ஏதேனும் பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.