முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் சந்த்ர ரியுடொர் ராஜபக்ஷ காலமானார்.
கடந்த ஆறு மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைத்து நேற்று (21) தனது 70 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
காலம் சென்ற டீ.ஏ. ராஜபக்ஷவின் 9 பிள்ளைகளில் நான்காமவரே சந்த்ரா ரியுடொர் ராஜபக்ஷ ஆவார். அக்குடும்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாமவர் ஆவார்.
இவர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சு, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்களின் அந்தரங்கச் செயலாளராக கடமையாற்றியுள்ளதோடு, ஜனாதிபதி ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சமிந்த ராஜபக்ஷ எனும் ஒரேயொரு மகன் உள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஷவின் புதல்வர்கள் 9 பேர் ஆவார்கள். அவரது மூத்த புதல்வர் சமல் ராஜபக்ஷ அடுத்து ஜயந்தி ராஜபக்ஷ , மஹிந்த ராஜபக்ஷ , சந்த்ர ரியுடர் ராஜபக்ஷ , கோத்தாபய ராஜபக்ஷ , பசில் ராஜபக்ஷ, டட்லி ராஜபக்ஷ, பிரீத்தி ராஜபக்ஷ மற்றும் கந்தனி ராஜபக்ஷ ஆகியோரே இவர்களாவர்.