முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குருதாஸ் காமத் மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் காமத். இவர் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். தற்போது இவர் டிலி சாணக்கியபுரியில் வசித்து வருகிறார். 63 வயதாகும் இவர் தனது இல்லத்தில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று காலை சுமார் 7 மணிக்கு இவருக்கு திடீரென மாரடைப்பால் நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லும் போது வழியிலேயே இவர் மரணம் அடைந்துள்ளார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.