Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டணம்- நியதிச் சட்டம் வேண்டும்

November 8, 2017
in News, Politics
0

வடக்கு மாகா­ணத்­தில், விலை­மானி (மீற்றர்) மூலம் முச்­சக்­கர வண்­டி­கள் கட்­ட­ணத்தை அற­வி­டும் நிலை வடக்கு மாகா­ணத்­தில் எந்த ஓர் இடத்­தி­லும் சீர் செய்­யப்­ப­ட­வில்லை என வடக்கு மாகாண எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தெரி­வித்­தார்.

சபையின் பேர­வைச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற சபை­யின் அமர்­வி­லேயே வடக்கு மாகாண எதிர்க் கட்­சித் தலை­வர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
இது தொடர்­பில் அவர் தெரி­வித்­த­தா­வது:

ஒரு கிலோ மீற்­றர் தூரத்­தைத் தாண்ட ஒரு மணி­நே­ரம் செல்­லும் நெருக்­கடிமிக்க கொழும்பு மாவட்­டத்­தி­லேயே ஒரு கிலோ­ மீற்­ற­ருக்கு பக­லில் 50 ரூபா மற்­றும் இர­வில் 57 ரூபா 50 சதம் என்ற நிர்­ண­யிக்­கப்­பட்ட விலை­மானி மூலம் மட்­டுமே நீண்­ட­கா­ல­மாக முச்­சக்­கர வண்­டி­கள் கட்­ட­ணத்தை அற­வி­டு­கின்­றன. ஆனால் யாழ்ப்­பா­ணத்­தில் இந்த நிலை காணப்­ப­ட­வில்லை.

இது தொடர்­பில் மாகா­ணப் போக்­கு­வ­ரத்து அமைச்சு கவ­னம் செலுத்தவேண்டும்.
முச்­சக்­கர வண்­டிச் சார­தி­க­ளின் நலனைக் கருத்­தில் கொள்ள வேண்­டும். அதை­விட முக்­கி­ய­ மா­னது நுகர்­வோ­ரின் தேவை தொடர்­பா­னது. எனவே கண்­டிப்­பாக வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து நிய­திச் சட்­டத்­தின் கீழ் இதனைச் சீர­மைக்க வேண்­டும்.

இதே­நே­ரம் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் இது தொடர்­பில் கடந்த ஆண்டே நட­வ­டிக்கை எடுக்க முற்­பட்டு அதற்­கான ஏற்­பாட்டைச் செய்­தார்.

குறித்த விட­யம் தற்­போது மாகாண சபைக்கு உட்­பட்­டது என்ற வகை­யில் அதற்­கான ஏற்­பா­டு­களை மாகாண சபை மேற்­கொள்­ளும் என வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து அமைச்­சின் செய­லா­ளர் மாவட்­டச் செய­லா­ள­ருக்கு எழுத்­தில் அறி­வித்த கார­ணத்தால் மாவட்­டச் செய­லா­ளர் மேற்­கொண்ட பணி­யைக் கைவிட்­டி­ருந்­தார்.

இருப்­பி­னும் மாகாண போக்­கு­வ­ரத்து அமைச்­சும் கடி­தம் எழுதி ஓர் ஆண்டு கடந்து விட்­ட­போ­தும் எது­வும் இடம்­பெ­ற­வில்லை.
இத­னால் முச்­சக்­கர வண்டி உரி­மை­யா­ளர்­கள் 100 ரூபா­வுக்குச் செல்­லும் தூரத்­திற்­கும் 300 ரூபா கோரும் நில­மையே காணப்­ப­டு­கின்­றது. அதே­வேளை பய­ணி­க­ளின் முகத்­திற்கு ஒரு கட்­ட­ணத்தை யும் அற­வி­டு­கின்­ற­னர்.

இத­னால் இது தொடர்­பில் மாகாண போக்­கு­வ­ரத்து அமைச்சு உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என ஓர் அவ­சர கவ­ன­வீர்ப்­புப் பிரே­ர­ணையை முன் வைத்­தார்.

Previous Post

புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த குடும்­பப் பெண் தனக்­குத்­தானே தீ மூட்டி இறப்பு !!

Next Post

ஜனாதிபதியின் மச்சான் எதிர்ப்பு

Next Post

ஜனாதிபதியின் மச்சான் எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures